TN School Reopen: ஹேப்பி நியூஸ் – தமிழகப் பள்ளி மாணவர்களே இந்த வருஷம் செம ஈஸி போங்க!

0
159

தொடர்ச்சியான கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பாடத்திட்ட சுமையை குறைக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து காணலாம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதலின் பேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதையொட்டி பள்ளிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. நடப்பாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதாலும், பள்ளிகளில் நேரடியாக அல்லாமல் மாற்று வழிகளில் பாடம் நடத்தப்படுவதாலும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பாடத்திட்டம் பெரும் சுமையாக மாறியிருக்கிறது.

ஆசிரியர்களாலும் எல்லா பாடத்திட்டங்களையும் நடத்த முடியாது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு அமைத்தது. அவர்கள் கொரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், பள்ளிகள் திறப்பில் ஏற்பட்டுள்ள தாமதம், பாடத்திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவர் என்று தெரிகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here