TN 12th Result: தமிழகத்தில் 12-வது வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை திடீரென வெளியிடப்பட்டது.
கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதையொட்டி பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 7,99,717 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் பள்ளி மாணவர்களாக 7,79,931 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவியர்கள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் அடங்குவர். பொதுப் பாடப்பிரிவில் 7,28,516 பேர் தேர்வு எழுதினர். தொழிற்பாடப்பிரிவில் 51,415 பேர் தேர்வு எழுதினர்.அதன் முடிவுகள் இன்று வெளியானது.