5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு

0
87

தமிழகத்தில் உள்ள 13 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணையப் பெற்ற சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம். கலந்தாய்வில் பங்கு பெற தகுதியுள்ள மாணவர்களுக்கான விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 13 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 1,651 இடங்களுக்கு 10,858 தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here