5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு!

0
183

மிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்றாற் போல் மாணவர்களை தயார்படுத்தும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு!
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்றாற் போல் மாணவர்களை தயார்படுத்தும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் பங்கீடு உள்ளிட்ட வழிமுறைகளும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டது.
Read More: 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள்: பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

இந்த நிலையில், தற்போது 5,8 வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1,2,3 பருவ பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றும், மாவட்டத்தைப் பொறுத்து பொதுத்தேர்வு தேதிகள் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 5,8 பொதுத்தேர்வு பாடத்திட்டத்தின்படி, மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகிறது. மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தின் முப்பருவ முறை கடைபிடிக்கப்படும். 5 ஆம் வகுப்பைப் பொறுத்தவரையில், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இதே போல், 8 ஆம் வகுப்புகளுக்கு ஐந்து பாடங்கள், அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here