5.32 லட்சம் இலவச லேப்டாப்

0
14

பள்ளி மாணவ – மாணவியருக்கு, இலவச, லேப்டாப் வழங்குவதற்காக, 5.32 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்ய, எல்காட் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 1 மாணவ – மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், 5.19 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள்; 11 ஆயிரத்து, 553 முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள்; 463 மாற்றுத்திறனாளி பிளஸ் 1 மாணவர்கள்; கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 படித்த, 1,293 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, மொத்தம், 5.32 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.

அதற்கு தேவையான லேப்டாப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எல்காட் நிறுவனம், டெண்டர் கோரியுள்ளது. விரைவில் லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும் என, எல்காட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here