12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? 2019 டாப்பர்ஸ் கூறும் டிப்ஸ்

0
337

Central Board of Secondary Education எனப்படும் சிபிஎஸ்இ தேர்வாணையம், நடப்பு ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வை பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்துகிறது. இதற்கான ஹால் டிக்கெட் cbse.nic.in இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், 2019 CBSE பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூறும் அறிவுரையை டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

கரிஷ்மா அரோரா
2019 சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற மாணவி கரிஷ்மா அரோரா. இவர் உத்தரபிரதேச மாநிலம், முஃபார்நகரைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்தில் சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மாணவி கரிஷ்மா தான். சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் எப்படி அதிக மதிப்பெண் பெற்றேன் என்பதை பற்றி அவர் கூறுகையில்,

‘சரியான திட்டமிடல், எப்போது என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே அட்டவணை தயாரித்து, அதனை சரியாக பின்பற்றினேன். ஒரு நாள் கூட திட்டமிட்ட கால அட்டவணையை தவறாமல் பின்பற்றினேன். ஆனால், முதல் இடத்தக்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை’. இவ்வாறு கூறுகிறார்.

ஹன்சிகா சுக்லா
காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி ஹன்சிகா சுக்லா. இவரும் சிபிஎஸ்சி 2019 பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றவர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மொத்த பாடத்திட்டத்தையும், Chapter வாரியாக பிரித்தக் கொண்டு, அதற்கு ஏற்ப தேர்வுக்கு தயாராகியுள்ளார். மேலும், தினமும் செய்தித்தாள்களையும் வாசித்து வந்துள்ளார். தேர்வுக்கு தயாராகும் போது, மனஅழுத்தம் ஏற்பட்டால், அதை உணர்ந்து, பேட்மிண்டன் வீடியோஸ் பார்த்து உற்சாகம் அடைந்து விடுவார்.

எனவே, தற்போது 2020 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அனைத்து பாடங்களையும் ஒரு முறை வாசித்துக் கொள்ளவும். பாடத்திட்டம் வாரியாக, சேப்டர் வாரியாக சரியான திட்டமிடலுடன் பிரித்து படிக்க வேண்டும். இதற்கு முந்தைய சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாளை பெற்று, அதில் பயிற்சி பெற வேண்டும்.

படிப்பை தவிர்த்து மனஅழுத்தம் ஏற்படும் போது, மற்ற விளையாட்டுக்கள், மற்ற மகிழ்ச்சியான செயல்பாடுகளில் ஈடுபடலாம். உதாரணமாக ஓவியம் வரைவது, செய்தித்தாள் படிப்பது, புத்தகங்கள் படிப்பது, நகைச்சுவை பார்ப்பது போன்றவைகளில் சிறிது நேரம் செலவழிக்கலாம். இதுவே ஒரளவுக்கு உங்களது மனஅழுத்ததைப் போக்கி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here