10,12 ஆம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் தட்டுபாடு! மாணவர்கள் வேதனை!!

0
353

0,12 ஆம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு வரவுள்ள நிலையில், வினா வங்கி புத்தகங்கள் கிடைப்பதில் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10,12 ஆம் வகுப்புக்கான வினாவங்கி புத்தகம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றை படித்தாலே தேர்ச்சியடைந்து விடலாம் என்பதால் பெரும்பாலான மாணவ, மாணவியர் வினா-வங்கி புத்தகங்களை போட்டிப்போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகம்

சென்னையைப் பொறுத்தவரையில் MMDA அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு MCCபள்ளி ஆகிய மையங்களில் கிடைக்கிறது. இதே போல் மற்ற மாவட்டங்களிலும், முக்கிய மையங்களில் வினா வங்கி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 10,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வினா வங்கி புத்தங்கள் கிடைப்பதில் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 12 ஆம் வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கு மட்டுமே புத்தகங்கள் கிடைக்கிறது. 10 ஆம் வகுப்பு வினாவங்கி புத்தகங்கள் எப்போது வந்து கேட்டாலும் வினா-வங்கி புத்தகங்கள் பிரதிகள் இருப்பதில்லை. ஊழியர்களும் சரியாக பதில் சொல்வதில்லை என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறைந்தபட்சம் வினா-வங்கி புத்தகத்தையாவது ஆன்லைனில் பதிவேற்றும்படி கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here