10,12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் : சிபிஎஸ்இ

0
63

தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும், தேர்வு  அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. செயலர் அனுராக் திரிபாதி தெரிவித்தார்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும், தேர்வு  அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. செயலர் அனுராக் திரிபாதி தெரிவித்தார். நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வாரியத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் (அ) ரத்து செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில் திரிபாதி இவ்வாறு தெரிவித்தார்.

“வரும் கல்வியாண்டிற்கான வாரிய தேர்வுகள் நிச்சயம் நடைபெறும், தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்களை  மதிப்பீடு செய்யும் முறை தொடர்பாக சிபிஎஸ்இ திட்டங்களை உருவாக்கி வருகிறது,”என்று அசோசாம் அமைப்பு ஏற்பாடு செய்த ‘புதிய கல்வி கொள்கை : பள்ளி கல்வியின் பிரகாசமான எதிர்காலம்’ குறித்த வெபினாரில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர்வுகள் பழைய முறைப்படி  இருக்குமா? திட்டமிடப்பட்ட பிப்ரவரி-மார்ச் கால அட்டவணைப்படி நடத்தப்படுமா (அ)  ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

“இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் ஊரடங்கு கால கட்டத்தில்,  மாணவர்களுக்கு தகுந்த கல்வியை  எப்படி கொண்டு செல்வது என்ற கேள்விக்கு விடைத் தெரியாமல் இருந்தோம். ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளும் ஆசிரியர்களும் குறுகிய காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல்-கற்றல் முறைகளை பழக்கப்படுத்திக்கொண்டனர்,” என்று திரிபாதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here