பொதுத் தேர்வுகள் நடத்தி முடித்தவுடன் 1 மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முழு ஆண்டு விடுமுறைை விடப்படும். நடப்பு கல்வி ஆண்டில் அது போன்று இல்லாமல் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட உடன் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் உடனடியாக துவங்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் திறப்பதில் காலதாமதம், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய காரணங்களால் பொதுத்தேர்வு ஜூன் அல்லது ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனோ பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் பள்ளிக்கல்வித்துறை கருத்துக்களை கேட்டுள்ளது. பெற்றோர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து நாளை தமிழக முதல்வர் அறிவிக்க இருக்கின்றார்.
இந்நிலையில் வழக்கமாக மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை 10 , 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும் தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலை, அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.