10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வினாத்தாள் மையங்களில் கேமரா கட்டாயம் – தேர்வுத்துறை

0
451

10,11,12ஆம் வகுப்பு வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமிரா கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 2ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், வினாத்தாள் மையங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கட்டாயம் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதுடன், அங்கு தனி காவலரை பணி அமர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் எவ்வித கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here