தேர்வெழுதிய 39,000 மாணவர்களில், 22 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்றும் , மற்ற மாணவர்கள் அனைவரும் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. பள்ளிகளில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
இதேபோல தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எற்கபடவில்லை. அன்மையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வெழுதிய 39,000 மாணவர்களில், 22 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்றும் , மற்ற மாணவர்கள் அனைவரும் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோன்று 12-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவிலும் மிகக் குறைந்த அளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட இத்தேர்வில் 12 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்றும், மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.