10 சதவிகித இடஒதுக்கீடு: NIT-யில் வரும் ஆண்டில் நடைமுறை!

0
211

வேளாண்மை, சுகாதாரம், எந்திரவியல் என 8 துறைகள் சார்ந்த மென்பொருள் சிக்கல்களுக்கு தேவையான புதிய தீர்வுகளை முன் வைக்க உள்ளனர்.

10 சதவிகித இடஒதுக்கீடு: NIT-யில் வரும் ஆண்டில் நடைமுறை!

தொழில்நுட்பக் கழக (என்ஐடி) இயக்குநர் மினி ஷாஜி தாமஸ்
பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 % சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில் திருச்சி என்.ஐ.டியில் உலகளவிலான மிகப் பெரிய மென்பொருள் போட்டி (சாப்ட்வேர் ஹேக்கத்தான்) மார்ச் 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் இருந்து 48 மையங்களில் இருந்து 1,300 குழுக்கள், மொத்தம் 1.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தொடர்ச்சியாக 36 மணி நேரம் நடைபெறுகிறது.

வேளாண்மை, சுகாதாரம், எந்திரவியல் என 8 துறைகள் சார்ந்த மென்பொருள் சிக்கல்களுக்கு தேவையான புதிய தீர்வுகளை முன் வைக்க உள்ளனர்.

நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சியில் மாணவர்களோடு பேசுகிறார். மேலும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நிகழ்ச்சியைத் நாளைத் தொடங்கி வைக்கிறார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு அறிவித்த பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 % சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதற்கேற்க மொத்த இடங்களில் 25 % இடம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி , இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் 490 இடங்கள் அதிகரிக்கப்படுகிறது என்றும் என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here