வேளாண்மையை ஒரு பாடமாக சேர்க்க கோரிக்கை

0
441

அவரது அறிக்கை:தமிழகத்தின் முதன்மை தொழிலாக, வேளாண்மை திகழும் நிலையில், அது குறித்த பாடங்களை, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை, 30 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.தமிழகம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியாவிலும், தொழிற்படிப்புகளில், மருத்துவம், இன்ஜினியரிங்கிற்கு அடுத்தபடியாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக, விவசாயம் திகழ்கிறது.உயர்கல்வியில் முதன்மை படிப்பாக இருக்கும் விவசாயம், பள்ளிகளில் கற்றுத்தரப்படுவது இல்லை. மேல்நிலை கல்வியில், 200 பள்ளிகளில் மட்டுமே, வேளாண்மை ஒரு பாடமாக இருக்கிறது.ஆனால், துவக்க கல்வியிலோ, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளிலோ, விவசாயம் பாடமாக்கப்படவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, வேளாண்மையை, பாடமாக சேர்க்க வேண்டும். இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here