வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரிசல்ட்!

0
268

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் தேர்வு நடைபெற்று இவ்வளவு விரைவாக முடிவுகள் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை.

வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ர…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நபர்களுக்கு தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது என்று இங்கே காணலாம்.

தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் தட்டச்சர் என 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டது.

சென்னை NCC அலுவலகத்தில் அரசு உதவியாளர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் நடத்தியது. இதனையடுத்து உத்தேச விடைகள் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அனைத்தும் தேர்வுகள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்த பிறகே வெளியிடப்படும்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து, 72 நாட்களில் இன்று (நவ.12) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய கடற்படையில் வேலை.. பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. கை நிறைய சம்பளம்..

TNPSC Group 4 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் முறை:

படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்

படி 2: முகப்பு பக்கத்தில் Result என்ற பகுதி இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

படி 3: இப்போது டி.என்.பி.எஸ்.சி நடத்திய பல தேர்வுகளின் முடிவுகள் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும்.

படி 4: அதில், முதலில் இருக்கும் POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-4 (GROUP-IV SERVICES), என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

படி 5: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடங்கிய பக்கம் இப்போது காட்டப்படும்.

படி 6: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு பதிவு எண்ணை டைப் செய்து , குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here