பொங்கல் விடுமுறைக்கு பின், வரும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால்,மார்ச் முதல் பள்ளிகள்,கல்லுாரிகள் மூடப்பட்டன; ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்புகள்சில மாதங்களாக, ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு உள்ளன.
பொங்கல் விடுமுறை முடிந்து, 18, 19ம் தேதிகளில், பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனால்,20ம் தேதி தான் பள்ளிகளை திறக்க முடியும் என, தலைமை ஆசிரியர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி திறப்பு குறித்த அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், முறைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.