வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

0
15

பெற்றோறர்களிடம் கேட்ட கருத்தின்படி பள்ளிகளை திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். இதன்படி வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் முதலில் திறக்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கள் பள்ளிகள் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டிச.,2 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கடந்த ஜன.,6 முதல் வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்க 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஜன.,19 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here