ள்ளி மாணவர்களுக்கான இலவச சுற்றுலா பயணம்: கடற்கரை கோவில், வேடந்தாங்கலை கண்டுகளித்தனர்

0
149

மாமல்லபுரம்,

சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்களை முக்கிய சுற்றுலா மையங்கள் உள்ள இடங்களுக்கு இலவசமாக அழைத்து சென்று சுற்றி காண்பிப்பது வழக்கம். நேற்று மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த நெம்மேலி, மாமல்லபுரம், கோவளம், பையனூர், சட்ராஸ், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு இலவச சுற்றுலா பயணம் தொடக்க விழா அர்ச்சுனன் தபசு அருகில் நடந்தது.

இதற்கு மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கினார். முன்னாள் சுற்றுலா அலுவலர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பள்ளி மாணவர்கள் முதலில் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய பாரம்பரிய சின்னங்களான கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை சுற்றி பார்த்து அங்கு குழு, குழுவாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிறகு முட்டுக்காடு படகு துறை, வடநெம்மேலி முதலைப்பண்ணை, வேடந்தாங்கல் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முன்னதாக விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சுற்றுலா விழிப்புணர்வு பயணத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சுற்றுலா தலங்களின் சிறப்புகள், புராதன சின்னங்களின் வரலாற்று பின்னணி, அதன் வடிவமைப்பு காலம் குறித்து சுற்றுலாத்துறையினர் விளக்கி கூறினர். மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற சுற்றுலாத்துறை இணை இயக்குனர் பாலுசாமி, நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏஞ்சலின்மெர்சி, சுற்றுலா வழிகாட்டிகள் பாலன், கோ.சி.வரதராஜன் உள்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் 300 பேர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here