முதல்முறையாக ஆன்லைனில் நெட் தேர்வு: செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாள்!

0
371
முதல்முறையாக ஆன்லைனில் நடத்தப்படும் ’நெட்’ தகுதித்தேர்வுக்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைஅறிவித்துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அந்தவகையில், கடந்த ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் நடத்த உள்ளது.

அதன்படி, தேசிய தேர்வு முகமையின் முதல் நெட் தேர்வு டிசம்பர் மாதம் 9-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புதிய அமைப்பு தேர்வை நடத்தினாலும் தேர்வுமுறையிலோ பாடத்திட்டத்திலோ எந்தவித மாற்றமும் இல்லை. தகுதியுள்ளவர்கள் www.ntanet.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இம்மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

(நெட் தேர்வானது முதல்முறையாக ஆன்லைனில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here