மாணவர்களுக்குச் சுதந்திர தினப் பரிசு! அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

0
410

இந்தப் படிப்புகளுக்காக முதலாம் ஆண்டுக்கு 167, இரண்டாம் ஆண்டுக்கு 145 மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு 138 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

மாணவர்களுக்குச் சுதந்திர தினப் பரிசு! அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
ஹைலைட்ஸ்
சுதந்திர தினப் பரிசாக 81 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்
இந்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படுவதாக அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு.
73வது சுதந்திர தின பரிசாக அரசுக் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் 69 இளநிலை பாடப்பிரிவுகள் மற்றும் 12 முதுநிலை பாடப்பிரிவுகள் என மொத்தம் 81 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன எனவும் இந்த கல்வியாண்டு முதலே இந்தப் பாடப்பிரிவுகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் படிப்புகளுக்காக முதலாம் ஆண்டுக்கு 167, இரண்டாம் ஆண்டுக்கு 145 மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு 138 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

மொத்தம் 45 கல்லூரிகளில் இந்த புதிய பாடப்பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஏற்கெனவே 91 புதிய பாடப்பிரிவுகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டன எனவும் 624 புதியப் பாடப்பிரிவுகளை தற்போதைய முதல்வர் பழனிசாமியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

2011ஆம் ஆண்டுக்குப் பின் மொத்தம் 1555 பாடப்பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here