மாணவர்களிடையே செல்போன் பயன்பாட்டை குறைக்க தனியார் பள்ளி வித்தியாச முயற்சி!

0
307

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்று, மாணவர்க ளிடையே செல்போன் பயன்பாட்டை குறைக்க வித்தியாசமான முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவடை ஊராட்சியில் கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த ஐந்து தினங்களாக புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.

இதில் நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் புத்தகங்கள், சமூக ஆர்வலர்களின் புத்தகங்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

இதுகுறித்து அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகையில்; மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், புத்தகத்தின் பக்கம் அவர்கள் பார்வையைத் திருப்ப வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த கண்காட்சி துவக்கப்பட்டது. இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஐந்து தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்த கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர். இதுபோன்ற அரிய புத்தகங்களை பள்ளியின் சார்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த கண்காட்சி துவக்கிய நாளில் இருந்து மாணவர்கள் வீட்டிற்கு வந்தவுடன், ஏதாவது ஒரு புத்தகத்தை பார்வையிடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக பெற்றோர்கள் கூறியதாகவும் அந்த ஆசிரியர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here