பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது..

0
122

பொதுப்பிரிவு மாணவர்கள் 5000 ரூபாயும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வு  இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 1,63,154 இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.

ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து .12,000 மாணவர்கள் தகுதி பெற்ற நிலையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

7,435 சிறப்புப் பிரிவு இடங்களில் 497 பேர் மட்டுமே சேர்ந்துள்ள நிலையில், எஞ்சிய 6,938 இடங்கள் இன்று நடைபெறும் பொதுப்பிரிவு கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன.

கட் – ஆப் மதிப்பெண் அடிப்படையில் 4 கட்டங்களாக நடைபெறும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியதுஇன்று முதல் வரும் 16-ம் தேதி வரை நடைபெறும் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 12,263 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 22,903 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 16 முதல் 24 வரை நடைபெற உள்ள 3-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 35,122 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின், 20 முதல் 28-ம் தேதி வரை இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஒவ்வொரு கட்ட கலந்தாய்வு முடிவிலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும், தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வும் இன்று தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடைபெற உள்ள தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க 1,533 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் தங்களுக்கான விருப்பக் கல்லூரிகள், விருப்பமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் போது அதிகளவிலான விருப்பங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றும், கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org இணையதளத்தை அணுகலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முதல் நாளான இன்று மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் பொதுப்பிரிவு மாணவர்கள் 5000 ரூபாயும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here