பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு

0
20

பொங்கல் விடுமுறைக்கு பின், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, வரும், 8ம் தேதி வரை, பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், 2020 மார்ச் முதல், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. நிலைமை சீராகி வருவதால், கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு, டிச., 2 முதல் வகுப்புகள் துவங்கின.

ஆனால், பள்ளிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. பள்ளிகளை திறக்காவிட்டால், மாணவர்களின் எதிர்காலம் மோசமாக பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டி, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில், அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. இதையடுத்து, பொங்கல் விடுமுறைக்கு பின், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக, பள்ளிகளை திறக்கலாம் என, பரிசீலனை செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here