பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்துமாறு AICTE அறிவுறுத்தல்! ரூ. 1.50 லட்சம் வரையில் உயரும் அபாயம்!!

0
68

தமிழகத்தில் நடப்பு 2020-21 கல்வியாண்டு முதல் பி.இ., பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை உயர்த்துமாறு AICTE கவுன்சில் தெரிவித்துள்ளது.

All India Council of Technical Education (AICTE) எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிருந்து, மாநில அரசுகளுக்கு அண்மையில் கடிதம் அனுப்பியது. அதில், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கட்டணத்தை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி 6 மற்றும் 7வது சம்பள கமிஷனை அமல்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2017 முதல் சுயநிதி கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் NBA (National Board of Accrediation) அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு ரூ.55,000 என்றும், NBA அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு ரூ.50,000 என்றும் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதே போல், தனியார் கல்லூரிகளில் NBA உள்ள படிப்புகளுக்கு ரூ.87,000 என்றும், NBA இல்லாத படிப்புகளுக்கு ரூ.85,000 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தற்போது புதிதாக கல்விக்கட்டணம் திருத்தியமைக்கப்படும் பட்சத்தில், 1.50 லட்சம் ரூபாய் வரையில் கல்விக்கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பல சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகள், தங்களுக்கான கல்விக்கட்டணத்தை 50 சதவீதம் வரையில் உயர்த்தலாம் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here