பாடநூலில் உள்ள பிழைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்பதா..? அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

0
284

பாடநூலில் உள்ள பிழைக்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் மீது எப்படி குறை சொல்ல முடியும்? என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பாடநூலில் உள்ள பிழைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்பதா..? அமைச்சர் செங்கோட்டையன் கேள்…
தமிழகத்தில் நலிவடைந்த 1 கோடி குடும்பங்களுக்கு வீடு தேடி 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: ‘’தந்தி வடம் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் முதன் முறையாக கோபியில் தொடங்கப்பட்டுள்ளது.

இதே போல் கொடிவேரி அணை பகுதியில் உள்ள சுற்றுலா பூங்கா விரைவில் விரிவுபடுத்தப்படும். குற்றாலத்தில் உள்ள அருவியில் கூட சில நேரங்களில் கற்கள் விழும். ஆனால், கொடிவேரியிலிருந்து வரும் நீர் பன்னீர் போல் இருக்கும். விடுமுறை தினங்களில் இங்கு குறைந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பாரத்து வருகின்றனர். வெளியூரிலிருந்து கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப கலை்கூடம் அல்லது கலை அரங்கம் அமைக்கப்படும்.

பொறியியல் முதுகலை படிப்பில் சேர அவகாசம் நீட்டிப்பு
அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஒரே தலைமையாக செயல்படுகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி வருகிறார்கள். நலிந்தோர் நலனுக்காக விரைவில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு கோடி மக்களிடம் வீடு வீடாகச் சென்று இந்த தொகை வழங்கப்படும். மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல், கல்விக்கு மிகப்பெரும் திட்டங்கள் நடந்து வருகிறது. விரைவில் கல்விக்கென தனித்தொலைக்காட்சி தொடங்கப்படும். இதுவரையில் சுமார் 45.72 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தில் ஏற்படும் பிழைகளுக்கு, அதை எழுதிய ஆசிரியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் மீது எப்படி குறை சொல்ல முடியும். இது போன்று பிழைகள் வந்தால், அதை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும். புதிய கல்விக் கொள்கையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here