பள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் குறிப்புகள்!

0
375

மூன்றாம் உலகப்போரைப் போல், கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதும் மாணவர்கள் வீட்டில் இருந்து படிப்பதற்கு UGC சிறப்பு ஏற்பாடு!
கொரோனா விடுமுறையில் என்ன செய்ய வேண்டும்? மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு
மார்ச் 27 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு ஆன்லன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய குறிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. சிபிஎஸ்.இ பிளஸ் 2 உயிரியல் பாடத்திலும், சில மாநில பாடத்திட்ட புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது. அதில், ‘கொரோனா போன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தனிமைப்படுத்துதலே ஒரே வழி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளியே எங்கேயும் செல்லக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும், ஒருவரிடம் பேசும் போது கூட தள்ளி நின்று பேச வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய குறிப்புகளை பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஆச்சரியத்தோடு அதை பிறர்க்கும் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக சில்வியா பிரவுன் (Sylvia Browne) புத்தகத்தில், 2020 இல் கொரோனா வைரஸ் வரும் என்று 12 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி பாடப்புத்தகத்தில் கொரோனா வைரஸ் பற்றிய குறிப்புகள் இருப்பதை இங்கு பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here