பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கும் போது பின்பற்ற வேண்டியவை: யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகள்

0
91

பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அக்டோபர் 15க்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாநிலஅரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. எனினும் கொரோனா அச்சம் காரணாக பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து யுஜிசி புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆறுநாள் வகுப்பு இதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகளை எப்போது தொடங்குவது என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம். ஆறு நாள் வகுப்பு அட்டவணையை பின்பற்றலாம் வகுப்புகளை பகுதி பகுதியாக பிரித்து நடத்தலாம் வகுப்பறையில் உள்ள இடங்களை பொறுத்து 50% மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்

ஆறு அடிஇடைவெளி மாணவர்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் ஆறு அடி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கைகள் சுத்தமாக இருந்தாலும் சானிடைசர்களை கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மும்போது கட்டாயம் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும் எந்தவொரு நோயையும் விரைவில் தெரிவிக்க வேண்டும். எச்சில் துப்புவது கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here