பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு – தமிழக அரசு தீவிர ஆலோசனை

0
82

பள்ளிகள் திறந்தால், சமூக இடைவெளி மாணவர்களிடம் எப்படி சாத்தியமாகும் என்று பெற்றோர் கூறும் கருத்தாக  உள்ளது

ள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வை அறிவித்த தமிழக அரசு, வரும் 16ம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என அரசு அறிவித்தது.

இதையடுத்து பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  ஆனால், கொரோனா இரண்டாவது அலை வரும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

பலநாடுகளில் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஜனவரி இறுதியில் அப்போதுள்ள சூழலை ஆய்வுசெய்து பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவர்கள், கல்வியாளர்கள் தெரிவித்திருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here