பல்கலை. தொலைதூரக் கல்வி: தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

0
416

சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக் கிழமை) வெளியிடப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தொலைதூரக் கல்வியில் இளநிலை படிப்புகளுக்கும், எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கும், சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுகள் நடைபெற்றன. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் www.ideunom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தேர்வு மடிவுகளை அறிந்து கொள்ளலாம். மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்புவோர் ஒவ்வெசாரு பாடத்திற்கும் தலா ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு தலா ரூ.300 செலுத்த வேண்டும். இதுகுறித்தான மேலும் விபரங்களை சென்னைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here