பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மார்ச் 11 ல் ஹால்டிக்கெட் வெளியீடு!

0
421

TN Public Exam: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மார்ச் 11 ல் ஹால்டிக்கெட் வெளியீடு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் மார்ச் 11 ஆம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி விட்டது. 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தாண்டு மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சத்து 55 ஆயிரத்து 748 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மார்ச 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிவந்த செய்திகளின்படி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியாகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், இந்த ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் ஏதேனும் திருத்தங்கள், பிழைகள் இருந்தால் அதனை உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.

பொதுத்தேர்வு பட்டியலில் மாணவர்களுடைய சுய விவரங்கள், பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்க வேண்டும். அவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல், தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டும் ஆன்லைனில் வெளியிடப்படும். அவர்கள், அதனை நேரடியாகவே இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here