நேற்று குரூப் – 1 முதல்நிலை தேர்வு

0
17

தமிழகத்தில், காலியாக உள்ள, 18 துணை கலெக்டர்கள், 19 டி.எஸ்.பி.,க்கள், 10 வணிக வரி உதவி கமிஷனர், 14 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், நான்கு ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், ஒரு மாவட்ட தீயணைப்பு அலுவலர் என, 66 பணியிடங்களுக்கு, குரூப்- – 1 தேர்வு நடத்த, 2020 ஜன., 20ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பிப்., 19 வரை, 1.28 லட்சம் ஆண்கள்; 1.29 லட்சம் பெண்கள்; 11 திருநங்கையர் என, மொத்தம், இரண்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 237 பேர் விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கான முதல்நிலை தேர்வு, இன்று காலை, 10:00 முதல் பகல், 1:00 மணி வரை நடக்க உள்ளது. 32 மாவட்டங்களில், 856 மையங்களில், தேர்வு நடக்க உள்ளது. சென்னையில், 150 மையங்களில், 49 ஆயிரத்து, 965 பேர், தேர்வு எழுதி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here