நாடு முழுவதும் நிறைவடைந்தது நீட் தேர்வு!

0
161

நீட் தேர்வுக்கான பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவடைந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கொரோனா காரணமாக நடப்பாண்டில் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 13ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த தேர்வை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய எதிர்க்கட்சிகளின் மனுக்களும் தள்ளுபடி உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனிடையே, நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வந்தது. நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் மொத்தம் 3,842 மையங்களில் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 15.97 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

முன்னதாக, தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் காலை முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். சில இடங்களில் போதிய போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சானிடைசர், ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவை தேர்வறைக்குள் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

பல மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழில் எழுதி வைக்கப்படவில்லை எனவும், பெற்றோர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தவரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. பல மையங்களில் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தராமல் பங்கேற்காத நிலை காணப்பட்டது. சென்னையில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக மானவர்கள் தேர்வெழுதினர். தென்காசியை சேர்ந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணமான இளம் பெண் தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்னார் அவரது தாலியை அதிகாரிகள் கழற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தாலி மற்றும் மெட்டியை அப்பெண் கழற்றிக் கொடுத்து விட்டு தேர்வெழுத சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here