சென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
நடப்பு கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பில்லை என்றும், 10, 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், விரைவில் அதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு நோய் தொற்று ஏற்பட்டது, என்பதை சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், எனவே அதனையும் கருத்தில் கொண்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் என்றார்.
விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.