தேர்வுக்கு ரெடியா? 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு

0
213

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன. மாதிரி வினாத்தாள்கள் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக பள்ளிக்கல்வித்துறை தெரியப்படுத்தியுள்ளது.

தேர்வுக்கு ரெடியா? 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு
2019-2020 கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடக்கும். மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள கூடுதல் நேரம் அளிக்கும் வகையில், பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.

10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை

ஏற்கெனவே தேர்வு அட்டவணை வெளியான நிலையில் தற்போது, 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே காலாண்டு, அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன. இந்த மாதிரி வினாத்தாள்களை http://www.tnscert.org/ என்ற தமிழக அரசின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் டவுன்லோட் செய்யலாம்.

புதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் ‘சுருக்கமாக’ வெளியீடு

மாதிரி வினாத்தாள்கள் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக பள்ளிக்கல்வித்துறை தெரியப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here