திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி அதிகாரி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்27-ந் தேதி தொடங்குகிறது

0
10

திருச்செந்தூர்,

இந்திய வங்கிகள் சங்கம்(ஐ.பீ.பி.எஸ்) நடத்தும் ‘புரபேஷனரி ஆபிசர்’ பதவிக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 12, 13, 19 மற்றும் 20-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வுக்கு www.ibps.in என்ற இணையதளம் வழியாக வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம்(செப்டம்பர்) 10-ந் தேதி வரை நடைபெறும். பயிற்சிக்கான கட்டணம் ரூ.4,000 ஆகும்.

விடுதி வசதி உண்டு

பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வெளியில் செல்லவோ, விடுப்பு எடுக்கவோ அனுமதி கிடையாது. பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3,000-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 27-ந் தேதி அன்று நேரில் செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.4,000-க்கான டிமான்ட் டிராப்ட்(கனரா வங்கி-ஐ.ஓ.பி-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படமாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர்கள் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு 04639-242998 என்ற தொலைபேசி எண்ணிலும், 94420 55243, 86829 85148 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here