ஜே.இ.இ., தேர்வை நான்கு முறை எழுத வாய்ப்பு

0
15

இந்த ஆண்டு, நான்கு முறை, ஜே.இ.இ., தேர்வு எழுதலாம் என தேசிய தேர்வு முகமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் அறிக்கை:  

ஐ.டி., ஐ.ஐ.டி., மற்றும் மத்திய அரசு நிதி உதவியோடு செயல்படும் தொழில் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில், பொறியியல் பட்டப் படிப்பில் சேர ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இத்தேர்வு கடந்த ஆண்டு வரை, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடைபெற்று வந்தது.
இத்தேர்வு இனிமேல் ஆண்டுக்கு நான்கு முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ., தேர்வு வரும் பிப்., 23 முதல், 26 வரை நடைபெறும். மார்ச்சில் 15 முதல் 18 வரை நடைபெறும். ஏப்ரலில் 27 முதல், 30 வரையிலும், மே மாதம் 24 முதல் 28 வரையிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
பி.ஆர்க் படிப்பின் வரைபட தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் கணினி அடிப்படையில் நடைபெறும். இத்தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளான, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றிலும் நடைபெறும். பிளஸ் 2 மாணவர்கள், இந்த நான்கு தேர்வுகளில், ஏதாவது ஒரு தேர்வு எழுதினாலும் போதுமானது. விருப்பப்பட்டால் இரண்டு, மூன்று, அல்லது நான்கு தேர்வு கூட எழுதலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண்ணோ அந்த மதிப்பெண் பட்டப் படிப்பில் சேர எடுத்துக்கொள்ளப்படும்.
கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நான்கு முறை ஜே.இ.இ., தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு முறை மட்டுமே ஒரு ஆண்டில் தேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டு இருந்தது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here