ஜன.,4 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு

0
23

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஜன.,4ம் தேதி துவங்கவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., — பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த நவ.,18ம் தேதி துவங்கியது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் நடைபெற்றது.

இந்நிலையில், வரும் ஜன.,4ம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் இன்னும் 12 இடங்கள் உள்ளதால், 4ம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 5ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here