சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் உயர்வு!

0
214

முன்னதாகச் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு 60 ரூபாயாகவும், முதுகலை படிப்புகளுக்கு 100 ரூபாயாகவும் தேர்வு கட்டணம் இருந்தது.

சென்னை பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஆனால் கல்விக் கட்டணங்களை ஏற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் 110 கல்லூரிகளுக்கு தேர்வுக் கட்டணம் வரும் தேர்வு முதல் உயர்த்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணங்கள் குறைந்தபட்சம் 85 ரூபாய் முதல் அதிகபட்சம் 165 ரூபாய் வரை இருக்கும். இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணங்கள் முன்பு இருந்ததை விட 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

முதுகலை படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணம் குறைந்தபட்சம் 150 ரூபாய் முதல் அதிகபட்சம் 350 ரூபாய் என 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்கள் பாடப்பிரிவைப் பொருத்து மாறும்.

தேர்வு நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்திருப்பது, 6-வது சம்பள கமிஷன் அறிவிப்புகள் அமல்படுத்துவது போன்ற காரணங்களால் செலவு அதிகரித்துள்ளது. இதைச் சரிக்கட்டவே இந்தக் கட்டண உயர்வு. தேர்வுக் கட்டணம் உயர்வு மூலம் சென்னை பலகலைக்கழகம் 10 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது என்றும் பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரம் தொலைதூர கல்விப் பிரிவு லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை உயர்த்தப்படவில்லை.

முன்னதாகச் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு 60 ரூபாயாகவும், முதுகலை படிப்புகளுக்கு 100 ரூபாயாகவும் தேர்வு கட்டணம் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here