சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

0
135

சென்னைப் பல்கலைக் கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில் டிசம்பர் மாதம் நடைபெற்ற எம்பிஏ தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தொலைதூரக் கல்வியில் இளநிலை படிப்புகளுக்கும், எம்ஏ, எம்காம், எம்எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுகள் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதேபோன்று அந்த காலகட்டத்தில் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.1,000 செலுத்த வேண்டும். அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here