சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது? மத்திய கல்வி அமைச்சர் பதில்

0
34

cbse board exam 2021 Postponed : சிபிஎஸ்சி வாரியத் தேதிகள் குறித்த அறிவிப்பு  பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் , ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் சிபிஎஸ்சி  வாரியத் தேர்வுகள் குறித்து காணொலி வாயிலாக உரையாடினார்.

மாணவர்களுடன் பேசிய அவர், “தேர்வுகளை ரத்து செய்வது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். மாணவர்களுடைய கல்வித்தரம், மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது என்பதும் மிக முக்கியமானது. எந்தவொரு கல்வி அமைப்பிலும் மாணவர்கள் கற்றுக் கொண்டதை மதிப்பீடு செய்வது என்பது மிக மிக முக்கியமான மைல் கல்லாகும்” என்று தெரிவித்தார்.

எனவே, சிபிஎஸ்சி வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்படாது. கட்டாயம் நடைபெறும். இருப்பினும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சற்று ஒத்திவைக்கப்படும். வாரியத் தேதிகள் குறித்த அறிவிப்பு  பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கற்றல் அளவை எட்டுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய அம்சங்களைத் தவிர்த்து, 30 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜேஇஇ தேர்வில் மாணவர்களின் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், “மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here