சிபிஎஸ்இ: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி

0
54

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிபிஎஸ்இ பொதுத்தேர்வெழுதும் தனித் தோ்வா்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ தனித் தேர்வர்களுக்கு 2021-இல் பொதுத் தோ்வுக்காக விண்ணப்பிக்க நவ.11-ஆம் தேதி கடைசி நாள். தாமதக் கட்டணத்துடன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நவ.21-ஆம் தேதி கடைசி நாள்.

மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கையைத் தொடர்ந்து 2021 பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் புதன்கிழமை வரை (டிச.9) நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து, அதில் திருத்தம் செய்ய விரும்புவோர் டிச.10 முதல் டிச.14-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு: cbse.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here