குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு

0
120

அரியலூர்,

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தற்கொலை எண்ணங்களை தடுத்தல் தொடர்பான திறன்வளர்ப்பு பயிற்சி நடத்துதல் வேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்துதல் வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்படங்கள் உள்ளூர் தொலைகாட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் விளம்பரம் வாகனம் மூலம் கிராமங்களில் ஒளிபரப்ப வேண்டும். பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு நிவாரண உதவி பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் பஸ் நிலையங்களில் வைக்க வேண்டும்.

உறுதிபடுத்த வேண்டும்

அனைத்து பள்ளிகளிலும் பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க E.Box என்ற செயலி குறித்து விழிப்புணர்வு மாணவ- மாணவிகளுக்கு ஏற்படுத்துதல் வேண்டும். மாணவ- மாணவிகளின் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கும் விதமாக அஞ்சல் உறை வழங்குதல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு குழந்தைகள் பாதுகாப்புகளை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவரும், இளைஞர் நீதிக்குழுமத்தின் தலைவருமான சந்திரசேகர் போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வசந்தகுமார், சமூக நல அதிகாரி அன்புகுலோரியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜன் மற்றும் உறுப்பினர்கள், நன்னடத்தை அலுவலர் ஜோதி, மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, தொழிலாளர் துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம் ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள், சைல்டு லைன் 1098 மற்றும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here