கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

0
485

நீட் தேர்வில் வெற்றி அடையாத மாணவர்களும் கால்நடை மருத்துவம் படித்து மருத்துவராக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (ஐந்தரை ஆண்டுகள்), உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (4 ஆண்டுகள்), (கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (4 ஆண்டுகள்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (4 ஆண்டுகள்) ஆகிய படிப்புகள் உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பில் 360 இடங்களும், உணவுத் தொழில்நுட்பம் மற்றும் கோழியின தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் தலா 40 இடங்களும் பால்வளத் தொழில்நுட்பத்தில் 20 இடங்களும் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

2019-20ஆம் கல்வி ஆண்டில் இந்தப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 10ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிவரிசை பட்டியலை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

ஜூலை 3ஆம் வாரத்தில் கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here