கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?

0
431

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இணைந்து நடத்தும் கால்நடை உதவி மருத்துவர் என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:

கால்நடை உதவி மருத்துவர் (Veterinary Assistant Surgeon)

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 1,141 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

அறிவிப்பாணை வெளியான தேதி: 18.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2019
வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 19.12.2019

முதல் தாளுக்கான தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020 (காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை)
இரண்டாம் தாளுக்கான தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020 (மதியம் 02.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை)

ஊதியம்:

குறைந்தபட்சமாக ரூ.55,500 முதல் அதிகபட்சமாக ரூ.1,75,700 வரை மாதசம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:

அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு: வயது தளர்வும் உண்டு

தேர்வுக்கட்டணம்:

1. நிரந்த பதிவு முறையில் பதிவு செய்ய கட்டணம் – ரூ.150
2. தேர்வுக்கான கட்டணம் – ரூ.200

கல்வித்தகுதி:

கால்நடை உதவி மருத்துவர் என்ற பணிக்கு, இளங்கலைப் பட்டப்படிப்பில் (B.V.Sc., & A.H.,) கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய படிப்புகளில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் 12 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிப்போர் ஆன்லைனில், டிஎன்பிஎஸ்சியின் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

1. எழுத்துத்தேர்வு
2. நேர்முகத் தேர்வு

மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற,http://www.tnpsc.gov.in/Notifications/2019_32_notifn_vet_asst_surg_new.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here