கல்லூரி மாணவர்கள் நன்னெறிகளை கடைபிடிக்க வேண்டும்”மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் பேச்சு

0
166

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் ராக்கிங் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நடுவர் ஹேமா முன்னிலை வகித்தார். பேராசிரியை மதுமதி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ராக்கிங் என்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக உள்ளது. ஆசிய கண்டத்தில் அது குற்றமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு விசயமும் நாம் அணுகும் முறையில்தான் உள்ளது. நாம் ஒரு விசயத்தை நல்ல முறையில் அணுகினால் மற்றவர்கள் பயனடைவார்கள். புதிதாக சேரும் மாணவர்களுக்கு சீனியர் மாணவ-மாணவிகள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். கல்லூரி வாழ்க்கையின் போது செய்யப்படும் குற்றங்கள், குற்றம் செய்த நபரின் எதிர்காலத்தை, முன்னேற்றத்தை அரசுப்பணி உள்ளிட்ட உயர்பதவிகளை அடைவதை பாதிக்கும். எனவே கல்லூரி மாணவ-மாணவிகள், குற்ற செயல்களில் ஈடுபடாமல் நன்னெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து ராக்கிங் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here