கல்லுாரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா

0
15

கல்லுாரி மாணவர்கள் அனைவரும், ஆன்லைனில் படிக்க வசதியாக, தினசரி, 2ஜி.பி., டேட்டா இலவசமாக பெறும் வகையில், எல்காட் நிறுவனம் வழியாக, இலவசமாக, டேட்டா கார்டுகள் வழங்கும் புதிய திட்ட த்தை, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

இந்த வசதி, ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சேர்க்கை விகிதம், 32 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.கல்லுாரி மாணவர்கள், சிறந்த கணினி திறன்களை பெற, அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவசமாக, &’லேப்டாப்&’ வழங்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக, கல்வி நிறுவனங்கள், இணையம் வழியே வகுப்புகளை நடத்தி வருகின்றன. இணைய வழி வகுப்புகளில், மாணவர்கள் கலந்து கொள்ள வசதியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுய நிதி கல்லுாரிகள் ஆகியவற்றில் படிக்கும், 9.69 லட்சம் மாணவர்களுக்கு, அரசு சிறப்பு திட்டம் வகுத்துள்ளது.
இதன்படி, இம்மாதம் முதல் ஏப்ரல் வரை, நான்கு மாதங்களுக்கு, தினமும், 2 ஜி.பி., டேட்டா பெற, எல்காட் நிறுவனம் வழியே, இலவச டேட்டா கார்டுகள் வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார். மேலும், இதை நல்ல முறையில் பயன்படுத்தி, மாணவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டும் என, முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here