கண்ணமங்கலம் அருகேசாலையில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்

0
257

கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி பள்ளக்கொல்லை கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1976-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக முரளிதரன், ஆசிரியராக ரவி ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இப்பள்ளிக்கு செல்லும் வழியில் ஒருவர் வீடு கட்ட மணல், ஜல்லி ஆகியவற்றை கொட்டியுள்ளதால் மாணவ -மாணவிகள் செல்ல வழியில்லை. மேலும் கிராம மக்கள் பள்ளி செல்லும் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நேற்று காலை பள்ளி செல்லும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் பள்ளக்கொல்லை கிராமத்தில் பள்ளி செல்லும் சாலையில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளி மாணவ -மாணவிகளை சாலையிலேயே அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போளூர் தாசில்தார் ஜெயவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழி, போளூர் வட்டார கல்வி அலுவலர் மோகன், கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அருள், அனந்தபுரம் கிராம நிர்வாக அதிகாரி நித்தியானந்தம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் மற்றும் வீடு கட்டி வரும் நபரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளி உள்ள இடம், பாதைகள் குறித்து தாசில்தார் ஜெயவேலு முன்னிலையில் அளவீடு செய்து, அந்த இடம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் உள்ளதால் வீடு கட்டக் கூடாது, மேலும் பள்ளி மாணவ -மாணவிகள் செல்ல பாதையில் தடை செய்யக்கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டது.

தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தி, மதிய உணவும் வழங்கப்பட்டது.

மேலும் சாலையில் பாடம் நடத்திய தலைமை ஆசிரியர் முரளிதரன், ஆசிரியர் ரவி ஆகியோருக்கு வட்டார கல்வி அலுவலர் மோகன் கண்டனம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here