ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளில் சேர அனுமதி: யுஜிசி பரிசீலனை

0
119

ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது குறித்து ஆராய பல்கலைக்கழக மானியக் குழு பிரத்யே குழு அமைத்துள்ளது.

பல பல்கலைக்கழகங்களிலோ ஒரே பல்கலைக்கழகத்திலோ ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு அனுமதி வழங்குவது பற்றி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆலோசிக்கிறது.

இதைப் பற்றி ஆய்வு செய்து முடிவு எடுப்பதற்காக யுஜிசி துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே பல்கலைக்கழகம் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ அல்லது பகுதி நேரமாகவோ இரு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் பயில்வதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்து இந்தக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.

READ | புதிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் ‘சுருக்கமாக’ வெளியீடு

கடந்த 2012ஆம் ஆண்டிலேயே யுஜிசி இந்த விஷயத்தில் ஆய்வு நடத்தியது. அப்போதும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர் ஃபுர்கான் கமர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் ஆலோசனைகளைப் பெற்றது. குறிப்பாக, ஒரு பட்டப்படிப்பில் சேரும் மாணவர், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மேலும் ஒரு பட்டப்படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் என அந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது. அதே சமயத்தில் சில சட்ட கவுன்சில்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் அந்தக்குழு அறிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முனைவர் பட்டங்களின் தரத்தை மதிப்பிடும் ஆய்வு: 150 பேர் விண்ணப்பம்

தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ளதால் அதனை பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்கட்ட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கலாமா என்பதை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது எனவும் இந்தக் குழு கடந்த மாதமே அமைக்கப்பட்டுவிட்டது எனவும் யுஜிசி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here