ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமா? GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

0
278

ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமா? GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
ஐஐடி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேருவதற்கான கேட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு ரூபாய் என்பதை இங்கு பார்ப்போம்.

நாட்டில் உள்ள ஐஐடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள், மற்ற முன்னனி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும் Graduate Aptitude Test In Engineering என்பதே கேட் விரிவாக்கம். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் பொறுத்தே முன்னனி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சீட் வழங்கப்படுகிறது.

JNVST: நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு!

இதற்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 3ம் தேதி தொடங்கியது. இன்று (செப். 24) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இன்று விண்ணப்பிக்க தவறுபவர்கள் தாமதக்கட்டணத்தை கூடுதலாக செலுத்தி அக்டோபர் 1ம் தேதி வரையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அடுத்த வருடம் பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

GATE 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை:
படி 1: மாணவர்கள் gate.iitd.ac.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘GATE Online Application Portal is live. Click here to Apply’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
படி 3: இப்போது ’Register Here’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்
படி 4: அதில் கேட்கப்பட்டுள்ள சுயவிபரங்கள், கல்வி விபரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும்

திருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்!

படி 5: மாணவர்களுக்கு இப்போது இமெயில், கடவுச் சொல் ஆகியவை வழங்கப்படும்
படி 6: இந்த இமெயில் மற்றும் கடவுச் சொல் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வரும் காலங்களில் இதை பயன்படுத்தி தான் இணையதளத்தில் உள்நுழைய முடியும்.
படி 7: விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்ப எண், பதிவு எண்னையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 8: பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படி 9: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இப்போது நீங்கள் கேட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here