எம்.எட்., படிப்பில் சேர விண்ணப்பம்

0
18

சென்னை: அரசு கல்வியியல் கல்லுாரிகளில், எம்.எட்., முதுநிலை பட்டப் படிப்பில் சேர விரும்புவோர், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

அரசு கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கு, எம்.எட்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tngasaedu.in என்ற இணைய தளத்தில், இன்று முதல், வரும், 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணம், 2 ரூபாய்; விண்ணப்பக் கட்டணம், 58 ரூபாய் என, 60 ரூபாய் செலுத்த வேண்டும்.
எஸ்.சி., – எஸ்.டி., விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தங்கள் விருப்ப வரிசைப்படி, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். தங்கள் சான்றிதழ்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விபரங்கள், இணையதளத்தில் உள்ளன. பதிவு செய்வதில் சிரமம் இருந்தால், 044 — 2235 1014, 2235 1015, 2827 6791 என்ற எண்களில், காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here