இஸ்ரோ இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம்!

0
287

இஸ்ரோ சார்பில் YUVIKA என்ற இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 113 மாணவரகள் தெரிவு செய்யப்பட்டனர். இதன் அடுத்தக்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை மார்ச் 26 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, YUVIKA பயிற்சிக்கு தெரிவு செய்யப்ப்டட மாணவர்கள்,ஏப்ரல் 2 ஆம் தேதி வரையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம். அதற்கு பிறகு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது.

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி மே மாதம் நடைபெறும். அப்போது மாணவர்கள் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்து செல்லப்படுவர். அங்கு அவர்களுக்கு அடிப்படை விண்வெளி அறிவியல், ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவை கற்றுத்தரப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here